தஞ்சாவூரில் சாராயத்தை கடத்தி வந்து அதில் வண்ண பொடியைத் தூவி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வீடு ஒன்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பலசரக்கு சாக்குகள் கட்டப்பட்ட மூட்டைகள் கிடந்தது. அதனை சோதனை செய்தபோது உள்ளே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாராயம் இருந்தது. கண்ணாடி பாட்டில்களும் இருந்தது. இந்த கும்பல் புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து வண்ண பொடியை தூவி அதை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து போலி மதுபானம் தயார் செய்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம், 500க்கும் மேற்பட்ட போலி மது பாட்டில்கள், மூடியை பேக் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.