சைதை துரைசாமி, பா.வளர்மதி நீக்கம்!
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து சைதை துரைசாமி, மைதிலி திருநாவுக்கரசு, எஸ்.வளர்மதி நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து பா.வளர்மதி நீக்கப்பட்டுள்ளார் என்று தினகரன் அறிவித்துள்ளார்.