சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் டிஸ்டிலரியை மிடாஸ் மோகன் என்பவர் கவனித்து வந்தார். அந்த நிறுவனத்தில் சில பிரச்சனைகள் வந்ததால், அதனை கருணாஸ் கையில் கொடுக்கிறார் சசிகலா. அவர் சசிகலாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் செயல்பட்டு அந்த நிறுவனத்தை நடத்தினார். கருணாஸ் கையில் இந்த நிறுவனம் சென்ற பிறகும் சில பிரச்சனைகள் வந்தது.
அப்போது, தான் இருக்கும்போது இந்த அளவுக்கு பிரச்சனை இல்லை, கருணாஸ் இந்த நிறுவனத்தை கவனிக்கும்போது அதிக பிரச்சனைகள் வந்திருக்கிறது என்று மிடாஸ் மோகன் கூறியிருந்தார்.
தற்போது உள்ள அரசியல் சூழலில் சசிகலாவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது சசிகலா தரப்பில் இருந்து மிடாஸ் விஷயத்தை பேசியிருக்கிறார். மிடாஸ் விஷயத்தை கிளீயர் செய்தவற்கு அரசு ஒத்துழைக்கும் என எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து சிக்னல் வந்ததால்தான், சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்ற கருணாஸ், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.