ரூபாய் நோட்டில் உருவப்படம் - எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் பேட்டி!
தமிழகம் முழுவதும் அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர்-ஐ மேலும் சிறப்பிக்கும் வகையில் 100 ரூபாய் தாள் மற்றும் 5 ரூபாய் தாள்களில் அவருடைய உருவப்படம் பதிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள கோடான கோடி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கட்சியை தற்போது தனி தனி அணியாக பிரிந்து மக்களின் மத்தியில் இந்த அவலநிலைக்கு கொண்டுச்சென்றுள்ள நிலையில், இந்த நிகழ்வு ரசிகரின் மனதில் கடும் வெயிலின் தாக்கத்தில் சற்று இளைப்பாற கொஞ்சம் தண்ணீர் அருந்தியது போல் இருக்கிறது.
இது குறித்து எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகளான சுதாவிஜயனிடம் நக்கீரன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

எம்.ஜி.ஆர் அவர்களின் உருவம் பதித்த ரூபாய் நோட்டு அச்சிடப்படுவது உண்மையிலே சந்தோசமாக இருக்கிறது. மத்திய மாநில அ்ரசுக்கு என் இதயம் கணிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும் மக்களின் இதயங்களில் எம்.ஜி.ஆர் வாழ்கிறார் அதனால் கிடைத்த பரிசு இது என்றார்.
அதேகுடும்பதை சேர்ந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், தம்பி மகனான தீபன் ராமசந்திரன் நம்மிடம் கூறும் போது,

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நாங்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக பிரதமருக்கும், அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இது குறித்து கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தவகையில் பிரதமருக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர் ரசிகர்களின் இந்த அளவில்லா அன்பே ரூபாய் நோட்டில் அவரது படம் இடம்பெற வழிவகுத்துள்ளது. ஆகவே இந்த செய்தி எங்களை விட கோடான கோடி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கே அதிக மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவே அவரது ரசிகர்ளுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- அருண்பாண்டியன்