Published on 28/08/2018 | Edited on 28/08/2018
சிறையிலிருந்து பரோலில் வெளிவர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் எளிதாக வர முடியும் என்ற ஆங்கில நாளிதழ் செய்தியை தானாக முன்வந்து வழக்காக எடுத்து மாநில மனித உரிமை ஆணையம்
இது தொடர்பாக தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி விரிவான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகளுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது?? 2017 - 18ல் எத்தனை கைதிகள் பரோல் கேட்டுள்ளனர்?,பரோல் கொடுக்கவில்லை என எத்தனை புகார்கள் வந்துள்ளது? அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?,கைதிகளின் உரிமைகளை மீறும் வகையிலான சிறைத்துறையினரின் அஜாக்கிரதையான செயல்பாடு மனித உரிமை மீறல் ஆகாதா?? உள்ளிட்ட கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார்.