Published on 04/03/2018 | Edited on 04/03/2018

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக திருட்டு மற்றும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது திருடர்கள் ஒருபடி மேலே சென்று காவல்துறையினரிடமே தங்களது கை வரிசையை காட்ட துவங்கியுள்ளனர்.
கோவையில் உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் வெள்ளியங்கிரி. இவர் மகளின் பெயர் லாவண்யா. இன்று காலை தனது மகளை சென்னை அனுப்பி வைப்பதற்காக ரயில் நிலையம் சென்ற போது பி.ஆர்.எஸ் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த ஒரு நபர் லாவண்யாவின் 1 பவுன் நகையை பறித்து சென்றார். காவலர் குடியிருப்பான பி.ஆர்.எஸ் முன்பு , உதவி ஆய்வாளர் தனது காவல்துறை சீருடையில் இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடதக்கது. இந்த சம்பவம் குறித்து பந்தயசாலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.