
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடி ஒருவர் வயல்வெளி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ளது ரெண்டாடி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீனிவாசன். இவர் மீது ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சீனிவாசன் முன்னாள் பாஜக நிர்வாகி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரெண்டாடி கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சீனிவாசனை மறைந்திருந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சீனிவாசனை கண்டு அந்த வழியில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த சோளிங்கர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ரவுடி ஒருவர் வயல்வெளியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.