Skip to main content

தினகரனின் கருத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
தினகரனின் கருத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஆட்சி சரியில்லை என்றால் மக்கள் எங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி இருப்பார்கள் எனவும் மக்கள் போராட்டங்கள் இல்லாமல் ஆட்சி நடப்பதை வைத்தே நாங்கள் சிறப்பான ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அதிமுக அம்மா அணி பொது செயலாளர் தினகரனின் கருத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வை பொறுத்தவரை நாளை தமிழக முதல்வர் பிரதமர் சந்தித்து பேச இருப்பதாகவும் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும் சமாளிக்கும் அளவிற்கு தமிழக மாணவர்களில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் தொடர்பாக அனைவரின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பொள்ளாச்சியை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை, வேளான் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட  குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு இந்த புதிய பாடத்திட்டதை அறிமுகப்படுத்துவோம் எனவும் கூறியதுடன் நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளுக்கு தொழிலதிபர்கள் மூலம் நிதி திரட்டி கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் குறித்த அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் தினகரன் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நாங்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் எனவும் ஆட்சி சரியில்லை என்றால் மக்கள் எங்களைக் எதிர்த்து போராட்டம் நடத்தி இருப்பார்கள் ஆனால் மக்கள் வாழ்த்திக்கொண்டிருப்பதாகவும் கூறியதுடன் கடுமையான வறட்சியின் போதும் நாங்கள் சிறப்பான ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்