தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துகுமாரசாமி கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை வழக்கறிஞராக பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தலைமை வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்வதாக ஆளுநரின் செயலர், சட்டத்துறை செயலர் ஆகியோருக்கு முத்துகுமாரசாமி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அவர் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் ராஜினாமா செய்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை வழக்கறிஞர் பதவிக்கு விஜயநாராயணன், ராகவாச்சாரி, அரவிந்த் பாண்டியன் ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகிறது.
- ஜீவா பாரதி