கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு
கீரமங்கலம், செப், 24. கீரமங்கலம் பகுயதில் காய்ச்சலால் பலியான சிறுமி குடியிருந்த பகுதியில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
காய்ச்சலுக்கு பலியான சிறுமிகள் :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தில் காயத்திரி (4), காசிம்புதுப்பேட்டை ராதிகா (13) ஆகிய சிறுமிகள் அடுத்தடுத்து 3 நாட்களுக்குள் காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
மருத்துவக்குழு ஆய்வு :
இந்த நிலையில் நேற்று முன்தினம் செரியலூர் இனாம் ஊராட்சி காசிம்புதுப்பேட்டையில் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த ராதிகா குடியிருந்த பகுதிக்கு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதரா நிலைய அலுவலர் டாக்டர் சித்திரா தேவி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடங்களை கண்டறிந்து அழித்ததுடன் அப்பகுதியில் காய்யசல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்க வர வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதே போல கீரமங்கலம் சுற்றியுள்ள செரியலூர், மேற்பனைக்காடு, பனங்குளம், குளமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், நெய்வத்தளி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
-இரா.பகத்சிங்