Published on 04/11/2018 | Edited on 04/11/2018
![ச்](http://image.nakkheeran.in/cdn/farfuture/bKV7Ric0c0vB4DlxGLQ6dZVFqVzlc75nFoKVdmrdGTA/1541354194/sites/default/files/inline-images/sar.jpg)
வீட்டு மனை உள்ளிட்ட நிலங்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள நில வழிகாட்டி மதிப்பை குறைத்து, பத்திரங்கள் பதிவு செய்யப்படுவது தெரியவந்திருப்பதாகவும், ஒவ்வொரு பகுதிக்கும் நில வழிகாட்டி மதிப்பு வகுக்கப்பட்டுள்ள நிலையில், உரிய காரணங்கள் இன்றி மதிப்பு குறைக்கப்பட்டு, பத்திரப்பதிவு செய்யப்படுவது தணிக்கையில் தெரியவந்துள்ளதாகவும், உரிய ஆதாரங்கள் இன்றி மதிப்பு குறைக்கப்பட்டது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தொகை, சம்பந்தப்பட்ட அலுவலரிடமே வசூலிக்கப்படும் என்றும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு பத்திரப்பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.