சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, பணி நியமன ஆணை, வாகனங்கள் ஆகியவை வழங்கி சிறப்பித்தார் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(23.07.2021) அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கலபட்டு ஆகிய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செய்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாவது, “ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள் ஆய்வுகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்கள் பள்ளி இடைநிற்றலை கண்காணித்து தொடர்ந்து கல்வி கற்றலை உறுதி செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து அமைச்சர் நான்கு மாவட்ட துறை அலுவலர்களுக்கு கரோனா காலத்தில் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் பணிகளை விரைவுபடுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் தொடர்ந்து அய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அடுத்த ஆய்வின்போது சரிவர பணிகளை மெற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.