Skip to main content

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்; பிரச்சனைகளை ஒரு மணி நேரத்தில் தீர்ந்துவிடுவோம்-திமுக பொருளாளர் துரைமுருகன்

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுக்க நடை பெற்ற கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து ஈரோட்டில் இன்று லக்காபுரம், கஸ்பா பேட்டை, எலவுமலை ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

 

 

durai murugan

 

கிராமசபையில் ஆண்கள், பெண்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர், மின்சாரம், கழிவு நீர் வசதி மற்றும் முதியோர் உதவித் தொகை என ஏராளமான அத்தியாவசிய பிரச்சனைகளை கூறினார்கள் அதன் பிறகு பேசிய துரைமுருகன். 

 

 

இந்த அரசுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும்  இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இது மக்களுக்கும். அரசுக்கும் நல்லதல்ல. அதிகாரிகள்தான் அரசை வழிநடத்துவார்கள். எனவே இந்த அரசு அதிகாரிகளிடமும்  நிர்வாகத்திற்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த  வேண்டும்" என்றவர் மேலும் 

 

மக்கள் குடிநீர் , முதியோர் உதவித்தொகை , நூலகம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்துள்ளார்கள். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கள் பொதுமக்களிடம் செல்வதில்லை அவர்களின் பிரச்சனைகளை கேட்பதில்லை. தி.மு.க. தலைவர் எங்களிடம் .மக்களை சந்தியுங்கள், குறைகளை கேளுங்கள் , நம்மால் முடியாவிட்டாலும் மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என சொன்னார்.. மக்களை சந்திப்பது தான் மகத்தான வெற்றி என்றார்.

 

durai murugan

 

தமிழகத்தில் மிகவிரைவில் ஆட்சிமாற்றம் வரும். அப்போது இந்த பிரச்சனைகளை ஒரு மணி நேரத்தில் நாம் தீர்ந்துவிடுவோம்." என்றார் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் ,"ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் அப்போதே  திமுக தலைவர் தளபதி   மு க ஸ்டாலின் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார் .   

 

 

தமிழகத்தில் சிலை திருட்டு கேடுகெட்ட செயல். கலை உணர்வு மிக்க சிலை திருடு போவது நாட்டிற்கே அவமானம். அதை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தேடி தேடி கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. நீதிமன்றம் சொல்லிய பிறகும் அமைச்சர் ஒருவர் அவர் யோக்யமானவரா என கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது, சிலை திருட்டைமறைமுகமாக அரசே ஆதரிக்கிறதா என ஐயம் ஏற்படுகிறது.

 

 

ஸ்டெர்லைட் விவகாரம் குழப்பமான நிலையில் உள்ளது. அரசுக்கே இது தொடர்பான தெளிவான நிலை இல்லை. இதுகுறித்து முதலமைச்சரை கேட்டாலும் இதைப் பற்றி தனக்கு  தெரியாது  என கூறுகிறார். இதுபோல கூறுவதற்கு அரசாங்கம் வெட்கப்படுவதாக தெரியவில்லை" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.