நூறு ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரளா இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் இருக்கிறது 300க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து இருக்க கூடிய சூழலில் மத்திய அரசு ஏன் இன்னும் இதனை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்று அனைத்து மட்டத்திலிருந்து தொடர்ந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் மிகவும் பாதிப்புகளை உண்டாக்கிய 2015-ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புகள் அதன் பின்னர் ஏற்பட்ட ஓகி புயல் பாதிப்புகள் என தென்மாநிலங்களில் பாதிப்புக்குள்ளாகிய இயற்கை பேரிடர்கள் எதையும் தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை.அப்படி இருக்கும்போது தற்போது கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளையும் மத்திய அரசு இதுவரை தேசிய பேரிடராக அறிவிக்காமல் இருக்கிறது. எதற்காக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கேள்வியும் எதன் அடிப்படையில் தேசிய பேரிடர் என்பதை மத்திய அரசு அறிவிக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது அதுகுறித்து வழக்கறிஞரும் பூவுலகின் நண்பர்களின் அமைப்பைச் சார்ந்த வெற்றிச்செல்வன் இடம் கேட்டோம் " தேசிய பேரிடராக அறிவிக்க எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. எதற்காக தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என்றால் தேசிய பேரிடர் நிவாரணத் தொகை என்று இருக்கிறது அதைப் உடனடியாக பெறுவதற்குதான். இது மத்திய அரசு செய்யக்கூடிய விஷயம் இதற்கு இந்த அடிப்படை இருக்கிறது என்றெல்லாம் கிடையாது.
மத்திய அரசு தனது மதிப்பீட்டின் மூலம் அறிவிக்கக் கூடிய தாகும். அதற்கான குறிப்பிட்ட விதிமுறைகள் என்று எதுவும் கிடையாது. தேசிய பேரிடர் என்பது உடனடியாக அந்த நிவாரணத் தொகை பெற பெறுவதற்காக மட்டுமேயாகும். இதற்கு முந்தைய காலகட்டங்களில் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டது என்பது புயல், நிலநடுக்கம் ,வெள்ள பாதிப்புகள் இவை அனைத்தும் ஒரு சில நாட்களிலேயே முடிவுக்கு வரும். ஆனால் தற்போது கேரளாவில் ஏற்பட்டது போல ஒரு வார காலம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கக்கூடியது இப்போதுதான். இது எல்லாம் புதியதான ஒன்றாகும் இதைப்போன்ற தொடர் பாதிப்புகளுக்கான விஷயங்களுக்குள் அரசு இன்னும் வரவில்லை. அதுதான் மிகப்பெரிய சிக்கலாகும் " என்கிறார்.