Skip to main content

ரேஷன் ஊழியர்கள் ஸ்டிரைக்- சம்பளம் பிடிக்க உத்தரவு! 

Published on 07/06/2022 | Edited on 07/06/2022

 

Ration shop workers on strike

 

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப., அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 07/06/2022 முதல் 09/06/2022 வரை மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அச்சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். 

 

மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தம் போராட்டத்தில் அனைத்து மண்டலங்களில் பணிபுரியும் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதால், 07/06/2022 முதல் 09/06/2022 வரை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறும், பொது விநியோகத்திட்டப் பணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படா வண்ணம், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளும் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறும், வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு 'No Work No Pay' என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு  அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்