சிதம்பரம் விபுஷ்னபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(53). இவர் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிறவியிலேயே காது கேளாமல் இருந்து வந்த நிலையில், இவர் காது மிஷின் பொருத்தி இருப்பார்.
இந்த நிலையில் இவர் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை பணி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு ரயில் பாதையை கடந்துள்ளார். அப்போது ரயில் அதிக சத்தம் எழுப்பியவாறு வந்துள்ளது. இவரது காதில் மெஷின் இல்லாததால் ரயிலின் சத்தம் கேட்கவில்லை மேலும் அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டும் இவருக்கு கேட்கவில்லை. இந்த நிலையில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்தார்.
இதனை அறிந்த சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறையினர் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது உடலை பார்த்து அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சக ரேஷன் கடை ஊழியர்கள் அழுது புலம்பியது அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.