கரோனோ வைரஸ் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இது குறித்து அறிவிப்பு வெளியான அன்றைக்கே சமூக வலைதளங்களில் ரேசன் கடைகளில் மக்கள் கட்டத்திற்கு நடுவே நின்று 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொள்வது போன்று படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக பொதுமக்கள் உடனே ரேசன் கடைகளுக்கு சென்று பணம் எப்போ வரும் என்று கேட்க ஆரம்பித்தனர். இதற்கு இடையில் பிரதமர் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு செய்துள்ள நிலையில் ரேசன் கடைகளிலோ ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகு தான் என்று சொல்லி அனுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் பேசும்போது, கரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள முடக்கம் பொதுமக்கள் தனித்தனியே இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கி செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் பொருளும் வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
மார்ச் மாசம் பொருட்களை ரேசன் கடைகளில் வாங்காமல் இருந்தால் தற்போது வாங்கிக்கொள்ளலாம். அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் நியாய விலைக் கடை பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் (TNPDS) அல்லது செயலியில் “வாங்க விரும்பவில்லை” என்று பதிவு செய்யலாம்.
அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு இதனை முறையாக வினியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களுக்கு 1000 ரூபாய் என அறிவித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி 21 நாள் 144 தெரிவித்தால் தற்போது இந்த 1000 ரூபாய் பணம் போதாது என்கிற குரல் அதிகரித்து வருகிறது.