Skip to main content

கற்பழிப்பு வழக்கு: அ.தி.மு.க முன்னாள் துணை மேயர் ஆசிக்மீரா உள்ளிட்ட 4 பேருக்கு தலா 10 வருட தண்டனை!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
கற்பழிப்பு வழக்கு: அ.தி.மு.க முன்னாள் துணை மேயர் ஆசிக்மீரா உள்ளிட்ட 4 பேருக்கு தலா 10 வருட தண்டனை!

திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினராகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த போது சாலை விபத்தில் மரண மடைந்த மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீரா. விபத்தில் மரியம் பிச்சை இறந்ததையடுத்து ஆசிக் மீராவுக்கு கட்சி மேலிடம் திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவியை கடந்த 2011-ம் ஆண்டு வழங்கியது. இவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரியை(29) திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கர்ப்பிணியாக்கிவிட்டு, பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றினார் என்றும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.



இதையடுத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆசிக்மீரா மீது, துர்கேஸ்வரி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். நீண்ட அலைக்கழிப்புக்குப் பிறகு 2012 ஜூன் 26-ம் தேதி போலீஸார் ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் துர்கேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆசிக் மீரா மீதான வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் எண் 5-ல் நடைபெற்று வந்தது.

இந்த நீதிமன்றத்தில் துர்கேஸ்வரி, தனது குழந்தைக்கு ஆசிக் மீராதான் தந்தை என்பதை நிரூபிக்க அவருக்கும் எனக்கும் மரபணு சோதனை நடத்த வேண்டும் மனு தாக்கல் செய்தார். ஆசிக் மீரா இதற்கு உடன்பட மறுத்தார். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்ற நடுவர் உத்தரவுக்கு பிறகு போலீஸார் ஆசிக்மீரா, துர்கேஸ்வரி, அவரது குழந்தை ஆகியோரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.



இந்த வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நீதிபதி ஜெசிந்திரா மார்டின் முன்னிலையில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் கடந்த மாதம் 20 தேதியே தீர்ப்பு வழங்குவதாக சொல்லியிருந்தார் இந்த நிலையில் இன்று காலையில் தீர்ப்பை வாசிக்க துவங்கியவர், ஆசிக்மீரா மற்றும் அவர் நண்பர்கள்,உள்ளிட் 4 பேருக்கு தலா 10 வருட சிறை தண்டனை வித்து உத்தரவிட்டார்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்