தூத்துக்குடி மாவட்ட எல்லையான சூரங்குடி வழியாக சென்ற ராமராஜ்ய ரதத்தினை நிறுத்தி வழிபாடு நடத்த கோரி இந்துஅமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடந்து ராமராஜ்ய ரதம் பக்தர்கள் வழிபாட்டிற்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும், தூத்துக்குடி நோக்கி சென்றது.
ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை கிளம்பிய ராமராஜ்ய ரதத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் எல்லை பகுதியான சூரங்குடியில் வரவேற்பு கொடுக்க இந்து அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு இருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட எல்லைக்கு வந்ததும், மாவட்ட எஸ்.பி.மகேந்திரன் தலைமையில் ராமராஜ்ய ரதம் காவல்துறையினர் பாதுகாப்புவுடன் தூத்துக்குடி நோக்கி சென்றது. சூரங்குடி பகுதிக்கு வந்ததும், ரதத்தினை நிறுத்தி வழிபாடு நடத்த வேண்டும் என்று இந்து அமைப்பினர் கேட்டனர்..ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கவே இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலையின் நடுவே வந்து ரதத்தினை மறித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வழிபாடு நடத்த சிறிது நேரம் அனுமதியளிக்கப்பட்டது. இதையெடுத்து பக்தர்கள் ராமராஜ்ய ரதத்தினை வழிபாட்டினர். பின்னர் ராமராஜய ரதம் காவல்துறையினர் பாதுகாப்புவுடன் குளத்தூர், தருவைக்குளம் வழியாக தூத்துக்குடிக்கு சென்றது.