Skip to main content

’’பாலாறு நம்மாறு’’ பாலாற்றை காக்கும் பயணத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

பாலாற்றங்கரையோறும் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிக்கொண்டா, ராணிப்பேட்டை, விஷாரம், ஆற்காடு பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள், வேலூர் மாநகரம், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிக்கொண்டா உட்பட பல நகரங்களின் கழிவுநீர் பாலாற்றில் தான் கலக்கிறது. அதோடு, பாலாற்றில் இருந்து அனுமதியற்ற முறையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணல் அள்ளிச்செல்கின்றன. இதனால் பாலாறு பாழடைந்துள்ளன.

 

anbumani

 

பாலாற்றை காக்க வேண்டும்மென முடிவு செய்த பாமக, கரம் கோர்ப்போம், பாலாற்றை காப்போம் எனகிற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடங்க முடிவு செய்தனர். இந்த நிகழ்வு இன்று செப்டம்பர் 22ந்தேதி தொடங்கியது. அதற்காக பாமக மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் எம்.பி, வேலூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு வருகை தந்துள்ளார். தற்போது ஆந்திரா – தமிழக எல்லையில் உள்ள புல்லூர் அணைக்கட்டு கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நிரம்பியுள்ளது. அதைக்கேள்விப்பட்டு அங்கு சென்று ஆய்வு செய்துவருகிறார் அன்புமணி.

 

anbumani

 

அதன்பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையேறிய அன்புமணி, பாலாறு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெற்றது ஒருக்காலத்தில் இப்போது கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் புள்ளிகளால் பாலாற்று மணல் சுரண்டப்பட்டுள்ளது. இதுப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. நாம் தான் நம் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்றுகூறினார்.

 

சார்ந்த செய்திகள்