Skip to main content

ராமதாஸ் அறிவிக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் : அன்புமணி 

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
anbumani ramadoss



தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
 

அப்போது அவர், 
 

தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத வகையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 
 

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க.தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதேபோன்று இந்த திட்டத்தையும் நிறைவேற்ற பா.ம.க. தொடர்ந்து போராடும். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, நெக்குந்தியில் ராணுவ தளவாட தொழிற்சாலை, மொரப்பூர்–தர்மபுரி ரெயில்பாதை இணைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற அந்தந்த துறைகளை சேர்ந்த மந்திரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 
 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. அண்மையில் கோவையில் நடந்த பா.ம.க. பொதுக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். இவ்வாறு பேசினார்.
 


 

சார்ந்த செய்திகள்