சன் பிக்சர்ஸின், ரஜினியின், கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ யின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் மேற்குவங்க மாநில டார்ஜிலிங்கில் நடந்தது.
அடுத்த ஷெட்யூலுக்கான செட் வேலைகள் செங்குன்றத்தை அடுத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கும் போதே, பின்னி மில்லில் ரஜினி-- விஜய் சேதுபதி—பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட சீன்களை எடுத்தார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அதன் பின் ரஜினியும் சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் அச்சு அசலாக மதுரை மாநகரத்தையே செட் போட்டிருந்தாலும், ஒரிஜினாலிட்டிக்காக ரஜினி, விஜய் சேதுபதியை வைத்து சில காட்சிகளை மதுரையிலேயே எடுக்கத் திட்டமிட்டிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
மதுரை சீன்களை. ரஜினியிடம் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன போது, “மதுரை வேண்டாம் ப்ளீஸ். ஏன்னா பொலிடிக்கல் ரீதியா சில டிஸ்டபென்ஸ் வரும். அதவிட முக்கியம், மு.க.அழகிரி என்னைப் பார்க்க விரும்புவாரு. அது ஸ்டாலின் தரப்பை வருத்தப்படுத்தும். அந்த சங்கடத்தை நான் சந்திக்க விரும்பல” என பக்குவமாகச் சொல்லி மதுரையை மறுத்துவிட்டாராம் ரஜினி.
அதனால் தான் ‘பேட்ட’யின் அடுத்தகட்ட ஷூட்டிங்கை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வைத்திருக்கிறார்கள். ரஜினிக்கு இருக்கும் சில அசைன்மெண்டுகளுக்கு லக்னோவும் வசதியாக இருக்கிறதாம்.