இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்துப் பேசினர்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் வெடித்த வன்முறை சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தை கண்டித்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ’’மத்திய உள்துறை மற்றும் உளவுத்துறையின் தோல்வியே வன்முறைக்கு காரணம். வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளை கேட்டு இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும், அமைதியும் ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நான் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2020