தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை புறட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. தண்ணீர் தாகத்தை தீர்க்கவேண்டி ஆளும் அதிமுக அரசோ கோயில், கோயிலாக சென்று யாகம்,புளியாதொரை, என பொழுதை கழித்துவருகின்றனர். திமுக போரிட்டத்தில் இறங்கி குரல்கொடுத்துவருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் தண்ணீரை டேங்கர் மூலம் கிராமங்களுக்கு வழங்கிவருகிறது.
தண்ணீர் பஞ்சம் சென்னையை மட்டுமல்ல காவிரி பாயும் டெல்டாபகுதிகளையும் விட்டுவைக்கவில்லை, திருவாரூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான திருத்துறைப்பூண்டி தாலுக்கா பகுதிமக்கள் கொள்ளிடம் கூட்டக்குடி நீரையே நம்பியிருக்கிறனர், சமீப காலமாக கொள்ளிடத்தில் நடந்துவரும் மணல்கொள்ளையால் கொள்ளிடம் கரையோர பகுதிகளிலூம் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. அதோடு மின்சாரத்தட்டுப்பாடும் அதிகமானதால் தண்ணீர் வரத்து குறைந்துபோனது. கொள்ளிடம் கூட்டுக்குடிநீரை நம்பியிருக்கும் மக்கள் பெருத்த அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள சில கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை டேங்கர் லாரிகள் மூலம் தீர்த்துவைக்கின்றனர் ரஜினிமக்கள் மன்றத்தின். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பள்ளங்கோவில்,கடியசேரி,கொத்தமங்கலம். உள்ளிட்ட கிராமங்களுக்கு தினசரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச குடிநீர் வழங்கிவருகின்றனர்.
அதனை திருவாரூர் மாவட்ட செயலாளர் கோ.தாயுமாணவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.