ஸ்ரீபெரும்புதூரில் இருந்து
டெல்லிக்கு செல்லும் ராஜீவ் ஜோதி!
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அமரர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் இருந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி ஜோதி டெல்லிக்கு எடுத்துச்செல்ப்படவிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் ராஜீவ்ஜோதியினை பிரகாசத்திடம் வழங்குகிறார். ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20ம் தேதி இந்த ஜோதி டெல்லியை சென்றடையும் என்று கூறப்படுகிறது.