அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 12 மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை குறையும்.

நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் தொடங்க வாய்ப்புள்ள தென்மேற்கு பருவமழை சராசரி அளவுக்கு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1951 முதல் 2000 ஆவது ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஜூன், செப்டம்பர் மாதங்களில் மழையின் சராசரி அளவு 89 சென்டிமீட்டர் நடப்பாண்டிலும் 89 சென்டி மீட்டர் அளவிலான மழைபொழிவு இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.