
சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 09.30 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்யும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. சென்னையில் கிண்டி, வேளச்சேரி, அடையாறு, நீலாங்கரை, கந்தன்சாவடி, கொட்டிவாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், மாங்காடு, போரூர், பெருங்களத்தூர், வண்டலூர், பூந்தமல்லி, குமணன்சாவடி, ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்துவருகிறது.
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (25/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.