Skip to main content

13 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 10/10/2024 | Edited on 10/10/2024
Rain alert for 13 districts

தமிழகப் பகுதிகளில் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்