Published on 19/12/2023 | Edited on 19/12/2023

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று மதியம் முதல் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்; நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு அருகே செல்லக் கூடாது. மரங்களுக்கு, நீர் நிலைகளுக்கு அருகே செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.