Skip to main content

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 2 நாட்களுக்கு மழை!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதியகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Rain for 2 days... Meteorological Department Announcement


கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் சாதக போக்கால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னையில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரில் 4 சென்டிமீட்டர் மழையும், பள்ளிப்பட்டு, சோழவரம், செம்பரம்பாக்கம், திருவாலங்காட்டில் 3 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்