![Thaniyarasu](/modules/blazyloading/images/loader.png)
8 வழிச்சாலையே வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் நிராகரிக்ககூடாது என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கரூரில் இன்று செய்தியாளர்கள சந்தித்த அவர்,
மத்திய மோடி அரசு தங்களின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து கொண்டு உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வு செய்ய அனுமதித்து இருக்க மாட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்கு காரணமாகிவிட்டது.
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் அவசியம் தேவை. சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தால் பாதிக்கக்கூடிய விவசாயிகளின் நிலம், மற்றும் வீடுகளுக்கு சந்தை மதிப்பை விட 4 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.
பாதிக்கப்படும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாற்று இடம் போன்றவற்றினை உறுதி செய்த பின்னர் நிலத்தை அளந்து எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக நிலத்தை அளப்பது, எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மக்களுடம் இணைந்து கொங்கு இளைஞர் பேரவை போராடும். அந்த வகையில் சாலையே வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் நிராகரிக்ககூடாது என அவர் கூறியுள்ளார்.