அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோவை குனியமுத்துரில் உள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும், அவரது சகோதரர் வீடு, சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட 55 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். இதன் காரணமாக அதிமுகவினர் எம்எல்ஏ விடுதிக்கு முன்பு குவிந்துள்ளனர்.
அதே போன்று கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பும் ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில், வேலுமணி வீட்டிற்கு வெளியே இருக்கும் கட்சியினருக்குக் காலை உணவு சுடச்சுட வழக்கப்பட்டுவருகிறது. பொங்கல், பூரி, இட்லி, தோசை என அவரவர் விரும்பியதை கட்சி நிர்வாகிகளிடம் வாங்கி சென்று சாலையில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.