Published on 01/10/2019 | Edited on 01/10/2019
ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றிக்கு எதிரான வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/hrqlgh_6pjEMhQ_GEQnBfnWUVpsef8wMxFi8nrSaX7U/1569921362/sites/default/files/inline-images/ooo.jpg)
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/_AzycWxif121W1xHj9wwMCUPB--rygf33I7a7J9ObFc/1569921455/sites/default/files/inline-images/C59vZlcWYAAXK7t.jpg)
அந்த வழக்கில் தற்போது தபால் ஓட்டுக்களை மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.