கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டியிருக்கும் நிலையில் தமிழகத்தில் கடும் அச்சத்தில் இருக்கும் எல்லையில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, கோவை மாவட்ட மக்கள் அரசின் அத்தனை உத்தரவுகளுக்கும் கட்டுபட்டு விழிப்புணா்வை கடைபிடித்து வந்தனா்.
இதில் குமரி மாவட்டம் என்பது கேரளா எல்லையில் நெருங்கியிருக்கும் மாவட்டம் கேரளா மக்களுடன் நெருங்கிய உறவு முறை பந்தத்தில் உள்ளவா்கள் என்பதால் கரோனா அச்சம் இங்குள்ளவா்களை அதிகம் வாட்டியது. இதனால் அரசின் ஒவ்வொரு உத்தரவுகளையும் தீவிரமாக பின்பற்றியது.
இந்த நிலையில் தான் இன்று நடந்த ஓரு நாள் ஊரடங்கு உத்தரவுக்கு நகர மக்களுக்கு சவால் விடும் விதமாக கிராம மக்களில் ஒருத்தா் கூட வெளியில் தலைக்காட்ட வில்லை. கிராமங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு கூட மரத்தடியில் கூடி நிழல் காய்வா்கள் அதை கூட இன்று பிரதமா் மோடியின் வேண்டுக்கோளுக்கு ஏற்று ஒருத்தா் கூட வெளியில் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளே முடங்கி விட்டனா்.
இதே போல் நகரத்தில் எப்போது பிசியாக இருக்கிற பிராதான சாலைகளில் ஒரு மனித தலையை கூட காண முடியவில்லை. ஒரு காலத்தில் நடந்த பாரத் பந்தில் கூட எங்கேயாவது ஒரு கடையாவது திறந்து இருக்கும். ஆனால் இன்றைக்கு ஏதாவது ஒரு சாலையில் பின் விழுந்தாலும் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு மாவட்டத்தின் அத்தனை சாலைகளும் அமைதியாக காணப்பட்டன. உயிரை காக்க நடந்த ஊரடங்கு நாள் குமரயில் வெற்றிக்கரமாக நடக்கிறது.