Skip to main content

ஜெ., பரிசுப்பொருள் வழக்கு தள்ளுபடி; செங்கோட்டையன் விடுவிப்பு

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட பரிசுப்பொருள் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.  மேலும்,   ஜெயலலிதா பரிசுப்பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவிடுத்தது உச்சநீதிமன்றம்.

 

s

 

1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பிறந்தநாள் பரிசாக அவருக்கு அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.   முதல்வராக இருப்பவர் தமக்கு வரும் பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனபது சட்டம். முதல்வர்  ஜெயலலிதா தனக்கு பரிசாக வந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டாலர்களை தமது வங்கிக்கணக்கில்  சேர்த்துக்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.    

 

ஜெயலலிதாவுக்கு அமெரிக்க டாலரை பரிசாக வழங்கிய செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.   ஜெயலலிதாவும், அழகு திருநாவுக்கரசும் காலமானதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.   

 


விசாரணையை சிபிஐ காலதாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.  ஆகையினால், 23 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை.  ஆகவே, இவ்வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்கிறது நீதிமன்றம்.   வழக்கில் உள்ள மூவரும் விடுவிக்கப்பட்டதால்  இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்