புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பாசியும் குப்பையும் நிறைந்த குளத்து தண்ணீரை அள்ளிக் குடிக்கும் மக்கள் வசிக்க இடமில்லாமல் பிளக்ஸ் போட்டுகளை மேற்கூரைகளாக கட்டி வாழ்கிறார்கள். இப்படி ஒரு கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ளது லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ள சுக்கிரண்குண்டு கிராமம். 60 குடும்பங்கள். 150 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமம். 20 அரசு வீடுகள் மற்ற அனைத்தும் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தென்னை கீற்று கொட்டகைகள். அவர்களுக்கு என்று 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டி, ஒரு அங்கன்வாடி மையம்.
கஜா புயலின் காற்றும் மழையும் தாக்கிய போது மரங்கள் ஒடிந்த விழுந்த போதும் தண்ணீர் நிரம்பி குடிசைகள் கிழ்த்துக் கொண்டு போனபோதும் கூட அந்த மக்கள் அந்த குடிசைகளை விட்டு வெளியே வரவில்லை. கை குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை இடிந்து விழுந்த குடிசைகளின் ஓரங்களில் நின்று கொண்டனர். அடுத்த நாள் அருகில் உள்ள அங்கன்வாடி சாவியை வாங்கி தங்கியுள்ளனர். ஆனால் ஒரு நாள் உணவும், தண்ணீரும் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. புயலாலும் மழையாலும் விவசாயம் அழிந்துவிட்டதால் விவசாய வேலைகளும் கிடைக்கவில்லை.
புயலில் கிழித்துக் கொண்டு போன கூரைகளை சீரமைக்க வழியில்லாமல் சாலை ஓரங்களில் கிழிந்து கிடந்த ப்ளக்ஸ் துணிகளை எடுத்து வந்து குடிசையில் போர்த்தி வைத்து அதற்குள் வசிக்கின்றனர். இந்த மக்கள் குடிக்க தண்ணீர் எப்படி கிடைக்கிறது என்றால்.. அருகில் மாட்டுச் சாணமும். தேங்காய் மட்டைகளும், விறகுகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்து பச்சை பாசி படந்துள்ள குளத்து தண்ணீரையே குடங்களில் எடுத்து வந்து குடிக்கவும் சமைக்கவும் பயன்படுத்துகின்றனர்.
அத்தனை வீடுகளும் புயலால் சேதடைந்திருந்தது. அரசு கட்டிக் கொடுத்த வீடுகளும் சேதமடைந்துள்ள நிலையில் வீட்டுக்குள் நனைந்து இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குழந்தைகளின் பிறப்புச் சான்று உள்ளிட்ட அத்தனை ஆவணங்களம் நனைந்து வீட்டு வாசலில் காயவைக்கிறார்கள்.
இப்படி முற்றிலும் பாதிக்கப்பட்டு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத இந்த கிராம மக்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லையாம். வுழி தவறி வரும் தனியார் நிவாணக்குழுக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வாழ்கிறார்கள். தங்களுக்கு மேட்டுப்பகுதியில் புயல், மழையை தாங்கும் வகையில் நிரந்தரமான வீடுகளும்ää குடிக்க தண்ணீரும் கொடுத்தால் போதும் உழைத்து சாப்பிடுவோம் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.
குளத்து தண்ணீரை குடித்து பலருக்கும் காய்ச்சல் அதனால் மருத்துவ முகாம் மற்றும் குடிதண்ணீர், உணவு, தெருக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் பிளிசிங் பவுடர். வுpரைவில் தண்ணீர் கிடைக்க மின்சார வசதி செய்து கொடுத்தால் அந்த கிராம மக்கள் நிம்மதி அடைவார்கள். இல்லை என்றால் ஒதுக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.