Skip to main content

விராலிமலை தொகுதியில் நடக்க இருந்த  4  குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.  

 

இந்த நிலையில்  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா  வெள்ளாஞ்சார் காலணியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை  சேர்ந்த அவரது அத்தை மகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் தகவல் அறிந்து சென்ற  சைல்டு பணியாளர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் வெள்ளாஞ்சார் காலணிக்கு சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து, திருமணத்தை நடத்தக் கூடாது என அறிவுறுத்தி குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

 

c

 

இதே போல விராலிமலை பகுதிகளில்  கோவில்காட்டுப்பட்டி,  கோமங்கலம், ராஜகிரி  உள்ளிட்ட மூன்று பகுதிகளில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டது.  

 

பின்னர் நான்கு  குழந்தைகளும் மீட்கப்பட்டு  குழந்தை நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.   

 

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது... அன்னவாசல், விராலிமலை  பகுதிகளில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக தகவல் உள்ளது. அதே போலத் தான் இன்று கிடைத்த தகவல்படி 4 பெண் குழந்தைகளை மீட்டுள்ளோம். மேலும் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு எங்களது பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இது போன்று நடக்காமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்  என்றார்.

சார்ந்த செய்திகள்