கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிதம்பரம் சுற்றுவட்ட பகுதியிலுள்ள ஏழை எளிய மக்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சுத்தமான சுத்திகரிப்பு குடிநீர் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் அருகில் உள்ள கடைகளில் காசு கொடுத்து வாங்கும் நிலைமையும் இருந்து வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவர் தமிழரசன் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க குடிநீர் நிலையம் அமைத்து தரவேண்டும் என மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இதனை ஏற்ற என்எல்சி இந்தியா நிறுவனம் மருத்துவமனையில் உள்ள இடங்களை ஆய்வு செய்து ரூ 12.2 லட்சம் செலவில் மணிக்கு 1000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் அசோக் பாஸ்கர் தலைமை வகித்தார். சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், துறையின் பொது மேலாளர் மோகன்,சமூக ஆர்வலர் இளங்கோவன் உள்ளிட்ட மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்தனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு நல்ல முறையில் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மருத்துவர் அசோக் பாஸ்கர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.