2012ம் ஆண்டு தொண்டு நிறுவனத்திடம் 25,000 ரூபாய் இலஞ்ச வழக்கில் திருச்சி டி.எஸ்.பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் எஸ்ஐ சந்திரசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் திருச்சி கோர்ட் வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
23.07.2012ம் ஆண்டு கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி தொண்டு நிறுவனங்கள் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது என்று சந்தேகப்பட்ட மத்திய அரசு உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாட்டு டி.ஜி.பிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களில் Foreign Contribution (Regulation) Act ( FCRI ) அனுமதி பெற்று இருக்கும் நிறுவனங்கள் எது என்று கண்டறிந்து அதை ரகசியாக விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாட்டு டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அந்த அறிக்கையின் கீழ் ரகசியமாக விசாரித்து அறிக்கை அனுப்ப உத்தரவுயிட்டு இருந்தார் டிஜிபி. தமிழ்நாட்டில் மட்டும் FCRI அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் 4500 அதில் திருச்சியில் மட்டும் 205 லால்குடியில் மட்டும் 15 டிரஸ்டுகள் இருந்தது.
26 வருடம் அனுபம் உள்ள போலீஸ் அதிகாரியாக இருப்பவர் லால்குடி டிஸ்.பி செல்வமணி அவரை தன்னுடைய 27 வயதில் குரூப் தேர்வில் வெற்றி பெற்று இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சிலம்பரசன் டி.எஸ்.பி செல்வமணி 25,000 இலஞ்சம் வாங்கும் போது கைது செய்தது தமிழகத்தில் உள்ள போலிஸ் அதிகாரிகளை நடுங்க வைத்தது.
திருச்சியில் லால்குடியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ராஜமாணிக்கத்திடம் அன்றைக்கு நடந்த சம்பவத்தை நாம் மீண்டும் அவரிடம் கேட்டோம். அவர் அந்த நினைவுகளை அப்படியே நக்கீரன் இணையத்திற்காக பகிர்ந்து கொண்டார்….
19.7.2012 அன்று நடந்த சம்பவத்தை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. ஆனால் நீண்ட சட்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இலஞ்ச விசயத்தில் அவர் என்னிடம் நேரடியாக விசாரிக்க அவசியம் காரணம் தொண்டு நிறுவனங்களை ரகசியமாக கண்காணித்து ரிப்போட் அனுப்ப வேண்டியது மட்டுமே அவருடைய வேலை அதை செய்யாமல் நீ எனக்கு பணம் தரவில்லை என்றால் உன்னுயைட அமைப்பையே சுழித்து விட முடியும் என்று சொல்லி என்னை மிரட்டவும் தான் நான் புகார் செய்தேன்.
அந்த டி.எஸ்.பி சிலம்பரசனும் பேசின பின்பு தான் எனக்கு தைரியமே வந்தது..
அவர் தமிழக அரசின் குழந்தை தொழிலாளர் பள்ளி நாங்கள் நடத்தி கொண்டு வருகிறோம். இதில் திட்டங்களில் எல்லாம் எங்களுடை சொந்த பணத்தை போட்டு நடத்தின பின்புதான் அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி கிடைக்கும்.
நாங்கள் இளைஞர்களாக சேர்ந்து நடத்தி வருகிறோம். இப்போது சமீபத்தில்தான் இந்த அனுமதி வாங்கி இருந்தோம். இதுவரைக்கு எங்களுக்கு எந்த நிதியும் வரவில்லை. ஆனால் தீடிர் என்று ஓரு நாள் கியு பிரான்ச் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி என்று உளவுத்துறை போலீஸ்காரர்கள் மாறி மாறி எங்களுக்கே தெரியாமல் எங்கள் நிறுவனத்தை பற்றி விசாரித்து இருக்கிறார்கள். பின்பு நேரடியாக வந்து விசாரித்து எல்லாம் மிக சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.
தீடிர் என்று லால்குடி ஸ்டேஷனில் இருக்கும் எஸ்.ஐ சந்திரமோகன் வந்து நாங்கள் எல்லாம் சரி பார்த்து டி.எஸ்.பியிடம் அனுப்பிட்டோம். அவரை ஒரு முறை பார்த்துவிடுங்கள் என்று சொன்னார். அதன் பிறகு நான் டி.எஸ்.பி பார்க்க அவருடை அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது இது ரொம்ப முக்கியமாக ரொக்கார்டு நான் நினைத்தால் உங்களுடைய அமைப்பையே சுழிவிடமுடியும் அதனால் 1 ருபாய் கூட குறைய கூடாது அப்படி குறைந்தால் அவ்வளவுதான் மற்றவை எல்லாம் எஸ்.ஐ. சந்திரமேகன் சொல்லுவார் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
என்னால் 25,000 ரெடி பண்ண முடியாது என்று எவ்வளவே கெஞ்சியும் அவர் அதில் உறுதியாக இருந்தால் நான் இந்த விசயம் சம்மந்தமாக ஒரு 10 நாளில் மட்டும் 15 முறைக்கு மேல் அவரிடம் சென்று இருப்பேன். அதன் பிறகுதான் இலஞ்ச ஒழிப்பு துறைக்கு போய் புகார் செய்தேன் பின்பு அவர்கள் ஆலோசனையில் படி டி.எஸ்.பி பேசின அனைத்தையும் பதிவு செய்தார்கள்.
அன்றைக்கு காலையில் பணம் கொடுக்க முயற்சி செய்த போது வேணாம் என்று சொல்லிவிட்டார். பின்பு மாலை 3.00 மணிக்கு வர சொல்லி நாங்கள் 2.45 மணிக்கே போய் கொடுக்கும் போது 15க்கு மேற்பட்ட போலீஸ் டி.எஸ்.பி சிலம்பரசன் தலைமையில் வந்து கைது செய்தார்கள்.
கடந்த 7 வருடங்களாக நடந்த இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று நீதிபதி ரவிசந்திரன் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி செல்வமணிக்கு 2 ஆண்டு சிறையும், எஸ்ஐ சந்திரசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்..
டி.எஸ்.பி செல்வமணி சொந்தமான ரோஸ் டிரஸ்ட் திருவண்ணாமலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.