Skip to main content

புளுவேல் விளையாடிய கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
புளுவேல் விளையாடிய கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை



உயிரை பறிக்கும் ப்ளுவேல் கேம் மதுரையையும் தாக்கியுள்ளது. மதுரை அருகே ப்ளுவேல் கேம் விளையாடிய விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

மதுரை ஆஸ்டின்பட்டியை அடுத்த மொட்டமலையில் கல்லூரி மாணவரான விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
 இந்த விசாரணையின் போது மாணவர் விக்னேஷின் கையில் ப்ளுவேல் கேம் அடையாளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயிரைக் கொல்லும் ப்ளுவேல் கேமை மாணவர் விக்னேஷ் விளையாடிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அண்மையில் சென்னையில் ப்ளுவேல் கேம் விளையாடிய மாணவி ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணல்

சார்ந்த செய்திகள்