![pudukottai incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/lyZJuWZGT0EDtR8ZzTEShINdeJiaYC95aiTe1QTUQXg/1595314833/sites/default/files/inline-images/ZSDGXFHG.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், போசம்ட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் போசம்ட்டி, கே.புதுப்பட்டியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்றும் அரிவாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மோதிக் கொண்ட இரு தரப்பினரையும் கலைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக கே.புதுப்பட்டியில் இரு தரப்பு மோதலைத் தடுக்க குவிந்த போலீசார் இரு தரப்பினரையும் விரட்டினர். அப்பொழுது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மோதல் தொடர்பாக போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோதல், துப்பாக்கிச்சூடு போன்றவற்றால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது.