Published on 24/10/2020 | Edited on 24/10/2020
![pudukottai DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/F8_t9iLRMBgU7Ym6ty4BvhcmyDh-JU_ppYGM8dApMaQ/1603549245/sites/default/files/inline-images/ADaDFADADADA.jpg)
புதுக்கோட்டையில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூரில் உள்ள அவரது சொந்த வீட்டிலேயே மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.