Skip to main content

ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. கஞ்சா போதை ஆசாமிக்கு தர்மஅடி!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

pudukottai alangudi incident

 

புதுக்கோட்டையில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் கஞ்சா போதை இளைஞர் ஒருவர்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பொதுமக்களால் தர்ம அடிகொடுத்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டையிலிருந்து மறமடக்கி செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்த பொழுது கஞ்சா போதையில் பேருந்தில் ஏறிய நபர் அந்த பெண்ணின் உடையை இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் கஞ்சா போதையில் இருந்த நபரை பிடித்து தர்ம அடிகொடுத்து கட்டிப்போட்டனர். அவனிடம் நடத்திய விசாரணையில் வன்னியன்விடுதியை சேர்ந்த பாண்டியன் என்பது தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கஞ்சா போதை ஆசாமி பாண்டியனை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்