Skip to main content

அ.ம.மு.க  அவசர ஆலோசனைக் கூட்டம் ; தி.மு.கவுக்கு போக கருத்து கேட்கும் நிர்வாகிகள்

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

 

    அ.ம.மு.க நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கட்சி மாறும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தினகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த தங்கதமிழ்செல்வன் உள்பட பல நிர்வாகிகளும் வெளியேறிவிட்டதால் அ.ம.மு.க வின் அடித்தளத்தில் ஆட்டம் கண்டுள்ளது.
  

p

 

 தற்போது ஒவ்வொரு மாவட்டமாக கட்சி மாறும் காட்சிகள் தொடங்கிவிட்டது. இறுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதலமைச்சரை சந்தித்துவிட்டு என்னை தம்பி விஜயபாஸ்கர் தான் அழைத்து வந்தார் என்றார். அதே ரெத்தினசபாபதி சில மாதங்களுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு குட்டி அமைச்சர் என்று அமைச்சர் விஜயபாஸ்கரை  விமர்சனம் செய்தார். தற்போது அன்று.. இன்று என்று ரெத்தினசபாபதியின் பேச்சுகள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


    இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நாளை திங்கள் கிழமை கூட்டியுள்ளார் மா.செ வும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரெத்தினசபாபதியின் தம்பியுமான மணமேல்குடி பரணி கார்த்திகேயன். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

    இது குறித்து சில நிர்வாகிகள் கூறும் போது.. கடந்த சில நாட்களாகவே செந்தில் பாலாஜியும், தங்க தமிழ்செல்வனும் தி.மு.க பக்கம் வாருங்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுக்கிறார்கள் என்கின்றனர். 

 

    மேலும், இந்த நிலையில் தான் ரெத்தினசபாபதி அ.தி.மு.க பக்கம் போய்விட்டார். அவர் அவரது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் மா.செ பரணி கார்த்திகேயன் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரை பிடிக்கவில்லை.  அதனால் அ.தி.மு.க வேண்டாம் தி.மு.க பக்கம் போனால் கட்சி பதவியும் அடுத்து வரும் தேர்தலில் வேட்பாளராக இடமும் கிடைக்குமா என்று குடவாசல் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஓரளவு தி.மு.க தரப்பில் சைகை கிடைத்துவிட்டதால் தான் கடந்த ஒரு வாரமாக கூட்டம் கூட்டம் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் திங்கள் கிழமை ஆலோசனைக் கூட்டம் என்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டுக் கொண்டு பிறகு தி.மு.க பக்கம் போகலாம் என்று சொல்லப் போறாங்க. விருப்பம் உள்ளவர்கள் அவர்களுடன் போகலாம் விருப்பம் இல்லாதவர்கள் அ.தி.மு.க பக்கம் போகவும் தயாராகி வருகிறார்கள். 


    ஆயிரம் பேருக்கு மேல் இணைக்க உள்ளதாக கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை புதுக்கோட்டைக்கு அழைத்து பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தி இணைப்பு விழா நடத்தவும் திட்டம் உள்ளது. 


    அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியும் உள்ளது. அந்த அதிர்ப்த்தியை கட்சி தலைமை வரை கடிதமாகவும் எழுதியுள்ளார்களாம் என்றனர்.


    விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக அ.ம.மு.க நிர்வாகிகள் வெளியேறும் நிலை உள்ளது.

சார்ந்த செய்திகள்