மலேசியாவில் அக்டோபர் 2 முதல் 6 ந் தேதி வரை உலக சிலம்ப சாம்பியன் சிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, சீனா, சிங்கப்பூர் உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 சிலம்ப வீரர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து சுமார் 80 இளைஞர்கள் மலேசியா செல்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர் இவர்களில் சீனியர் பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன் மகன் வீரமணிகண்டன் மற்றும் பயிற்சியாளர் சத்தியமூர்த்தியும் செல்கின்றனர். செவ்வாய் கிழமை அதிகாலை மலேசியா செல்லும் வீரமணிகண்டனை அவரது முன்னாள் கல்லூரி நிர்வாகிகள் வாழ்த்தி அனுப்பினார்கள்.
இதுவரை நடந்த பல போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்ற நான் உலக சாம்பியன் சிப் சிலம்பப் போட்டியிலும் தங்க பதக்கம் வென்று எனது கிராமத்திற்கும் என்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி உதவிகள் செய்து வரும் கல்லூரி நிர்வாகத்திற்கும் விடாமல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பேன் என்றார் வீரமணிகண்டன்.