Skip to main content

விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் தவிப்பு; நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு பிறகு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் உணவிற்கும், தங்குவதற்கும் எந்த வசதியுமின்றி தவித்துவருவதாக வேதனை குரலை வீடியோ மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

pudukkottai nagapattinam



சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பு மெரிஹானா முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பமுடியவில்லை. 
 

இந்தநிலையில் ,"உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியும் இல்லாமல் தவிப்பதாகவும், வெயிலிலும், இரண்டு நாட்களாகப் பெய்யும் மழையிலும் ஒதுங்கக்கூட வழியில்லாமல் தவிக்கின்றோம் எனத் தமிழக மீனவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள், "இலங்கை அரசு எங்களை மருத்துவப் பரிசோதனை கூட எதுவும் செய்யவில்லை, உடனடியாகத் தங்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்