புதுச்சேரியில் இன்று லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சமாதானமாகக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், தொழிலாளர்கள் தொடர்புடைய வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், சிவில் வழக்குகள் வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட பலதரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டன.
தலைமை நீதிபதி தனபால், சட்டப்பணிகள் ஆணைய-உறுப்பினர் செயலர் நீதிபதி சோபனாதேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் புதுச்சேரியில் 9 அமர்வுகள் , காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் தலா 1 அமர்வு என 12 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது. 5790- வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டதில் 3000- த்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் திருக்கண்ணச்செல்வன், அரசு வழக்குரைஞர்கள், காப்பீடு, வங்கித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.