புதுச்சேரி அடுத்துள்ள தமிழக பகுதியான மரக்காணம் அருகேயுள்ள முதலியார்குப்பத்தில் இலங்கை அகதி முகாம் உள்ளது. இந்த முகாமில் 416 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இவர்களது குழந்தைகள் கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள முதலியார்குப்பத்திலுள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளியின் அருகே முகாமை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே முகாமில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு வீட்டுக்கு திரும்பிய சிறுமி சோர்வாக இருந்ததை கண்ட பெற்றோர்,’ ஏன் சோர்வாய் இருக்கிறாய்?’ என்று கேட்டதற்கு சிறுமி சம்பவத்தை தெரிவித்திருக்கிறார்.
அதனையடுத்து புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்கள் இரண்டு பேரையும் கோட்டக்குப்பம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலூர் சிறார்கள் சிறையில் அடைத்தனர்.