வரலாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் வரலாறு படைக்க தனக்கான சில கதாப்பாத்திரங்களை தோற்றுவிக்கும் அப்படி காலம் தந்த அருட்கொடைதான் கலைஞர்.
அப்படிப்பட்ட திமுகவின் சூரியன் மறைந்தது, அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, திருவாரூருக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு.
நாகை மாவட்டம் திருக்குவளையில் அஞ்சுகத்தம்மாள், முத்துவேலர் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கலைஞர். அவர் அரசியல்துறை, கலைத்துறை, எனும் பலத்துறைகளில் ஜாம்பவனாக இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதை விட சரியான குடும்பத்தலைவாரகவும் இருந்தார் என்பதும் உண்மை. அவர் குடும்பம் என்பது சொந்தகுடும்பத்தையும் கழகத்தையும் ஒன்றாகவே நினைத்தார்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று பலரும் வாழ்த்துவதுண்டு. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூட வாய்க்காத பெருவாழ்வு கலைஞருக்கு வாய்த்தது.
1944 ம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்மனியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு முக முத்து என்னும் குழந்தை பிறந்தது. பிறகு பத்மாவதி மறைவுக்கு பிறகு தயாளு அம்மாளை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மு,க அழகிரி, முக,ஸ்டாலின், முக தமிழரசு, முக செல்வி, ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகு ராசாத்தி அம்மாளை திருமணம் செய்துகொண்டார் அவர்களுக்கு கனிமொழி என்னும் குழந்தை பிறந்தது.
கலைஞரின் சகோதரியின் பிள்ளைகள் தான் முரசொலிமாறனும், முரசொலி செல்வமும், அந்த செல்வத்திற்கு தான் தனது செல்வி என்னும் மகளை கொடுத்தார். இப்படி மகன்கள் மகள்கள் பேரன்கள், பேத்திகள், மருமகள்கள், மருமகன்கள் என ஒரு தலைமுறையின் வாரிசுகளோடு கொஞ்சுவிளையாடி மகிழ்ந்துவிட்டார், பெருகவாழ்வு வாழ்ந்துவிட்டார். உடல்நலம் சோர்ந்துபோன நிலையிலும் தனது வீல் சேரில் அமர்ந்தபடியே பேரக்குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்தார். அவர் நல்ல தேசிய தலைவர் என்பதோடு நல்ல குடும்பத்தலைவர்.