Skip to main content

திருநெல்வேலியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

The public is required to wear a face mask in Tirunelveli!

 

திருநெல்வேலி மாநகர காவல்துறை அலுவலகம் இன்று (15/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், நமது நாட்டின் பல பகுதிகளில் மரபு திரிந்த கொரோனா வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது இன்று (16/12/2021) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, முகக்கவசம் அணிந்து, சமூக விலகளைக் கடைப்பிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 

மேலும், மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அபாரதத்துடன் கூடிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், முகக்கவசம் அணியாத சமூக விலகலை கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக வளாகங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் ந.கி.செந்தாமரை கண்ணன் இ.கா.ப., தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்